
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படம் பாகுபலியின் வசூலை முறியடிக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட தகவல் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. உலக அளவில் இந்தப் படம் ரூ.223 கோடி வசூலித்துள்ளதாம்.இந்திய அளவில் இந்தப் படம் ரூ.156 கோடி வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ''தமிழுக்கும் இசைக்கும்...'': ரஹ்மானின் பாடல் குறித்து முதல்வர் கருத்து
இதன் மூலம் இந்திய சினிமாவுக்கு அதிக பட்ச முதல் நாள் வசூல் விவரங்கள் கொண்ட பட்டியிலில் 'ஆர்ஆர்ஆர்' முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் முதலிடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் கொமரம் பீம், சீத்தாராம ராஜு என இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...