கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பெரும் பொருள்செலவில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எஃப்' திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
அதன் தொடர்ச்சியாக கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், அதீரா எனும் எதிர்மறை கதாபாத்தித்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் இருந்த ஸ்ரீநிதி இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக வருகிறார்.
தற்போது இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரத்தத்தில் எழுதப்பட்ட கதை என்று தொடங்கும் டிரெய்லரில், அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி டப்பிங்கில் ஹீரோ பேசும் மாஸ் வசனங்களாக திருக்குறள் வரிகளும் இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோ
மாலுமி உயிரிழப்பு: குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஸ்ரீநாத் ஆறுதல்

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி': திரைவிமர்சனம்






