காவலரைக் கரம் பிடித்த நடிகை

காவலரைக் கரம் பிடித்த நடிகை

தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றும் அருண் குமாரை திருவண்ணாமலையில்...
Published on

தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுபவரைத் திருமணம் செய்துள்ளார் நடிகை அகல்யா வெங்கடேசன். 

2014 முதல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றி கவனம் பெற்றவர் அகல்யா வெங்கடேசன். தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம், யானை போன்ற பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றும் அருண் குமாரை திருவண்ணாமலையில் இன்று திருமணம் செய்துள்ளார் அகல்யா. திருமண வரவேற்பு வரும் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சமூகவலைத்தளத்தில் தனக்குத் திருமணமானது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் அகல்யா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com