சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக 2டி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
2001-ம் வருடம் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் - நந்தா. சூர்யாவைச் சிறந்த நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திலிருந்துதான். பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து சூர்யா நடித்தார். அவன் இவன் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார்.
2016-ல் தாரை தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, 2018-ல் நாச்சியார் படத்தை இயக்கினார். 2020-ல் பாலா இயக்கிய வர்மா படம் ஓடிடியில் வெளியானது.
இயக்குநர் பாலாவுடனான புதுப்பட அறிவிப்பை, கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டார் சூர்யா. என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என்று கூறினார். இப்படம் சூர்யா 41 எனத் தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. கீர்த்தி ஷெட்டி, மமிதா போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ்.
இந்நிலையில் இயக்குநர் பாலாவுடன் சூர்யாவுக்குக் கருத்துமோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பிலிருந்து சூர்யா வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சூர்யா - பாலா படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது படத்தைத் தயாரிக்கும் 2டி நிறுவனம். ட்விட்டரில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரியில் 34 நாள்களுக்கு முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சூர்யா 41 படம் அடுத்தக்கட்டத்துக்குத் தயாராக உள்ளது. செட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் கோவாவில் 15 நாள்களுக்குப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

”மாற்றத்தை விரும்பிய மக்கள்! ஏமாறாமல் இருந்தால் நல்லது!” ரகுபதி பேட்டி
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


