
சென்னை: நேற்று நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் 60 மணி நேரம் தூங்காமல் வேலை செய்வதாக கமல் கூறினார்.
சென்னையில் நேற்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பற்றி கமல் கூறியதாவது:
நான் ஒரு வருடத்தில் 22 படங்கள் நடித்தேன் ஓயாமல். அது போல அனிருத்தும் ஓயாமல் வேலை செய்துக் கொண்டு இருக்கிறார். அனிருத் 60 மணி நேரம் தூங்காமல் எப்படித்தான் வேலை செய்கிறாரோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் ஒல்லியானால் ஒன்றும் பிரச்சினை இல்லை, நன்றாகத்தான் இருப்பார். அதனால் செய்யட்டும். எங்களுக்கும் வேலை நடக்கிறது. இயக்குநரும் அவரை போட்டு விரட்டிக்கொண்டிருக்கிறார்”.
தற்போது வெளிவரும் தமிழின் முக்கால்வாசி படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர். தற்போது விக்ரம், இந்தியன் 2, ரஜினியின்169 படத்திற்கும் இசை அமைத்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...