
நெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ என்ற பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. இந்தப் படம் தற்போது தமிழில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி’ என்கிற தலைப்பில் உருவாகியுள்ளது. படத்தில் ஆரி, தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, அப்துல் லி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜிஷிண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
ஸ்டுடியோஸ், பேவியூ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகிற மே-20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், பின்னணி பாடகர் அனன்யா பட் பாடிய ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...