/

நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டியதாக அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :16 மே 2022, 12:54 pm

DIN

'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டியதாக அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. இந்தப் படம் தற்போது தமிழில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்  'நெஞ்சுக்கு நீதி’ என்கிற தலைப்பில் உருவாகியுள்ளது. படத்தில் ஆரி, தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, அப்துல் லி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜிஷிண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ஸ்டுடியோஸ், பேவியூ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகிற மே-20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் படத்தின் சிறப்புக் காட்சி சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நேற்று முதல்வர் ஸ்டாலினுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த முதல்வர் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியதாக அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.