மகாராஷ்டிரத்தில் திருமணத்திற்காக பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரணமாக இடைத்தரகர் மூலம் சிறுமி விற்கப்பட்ட நிலையில், கணவர் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்திற்குட்பட்ட பிவண்டி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி, திருமணத்திற்காக விற்கப்பட்டுள்ளார்.
மராத்வாடா மாகாணத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பாவுசாஹேப் தாம்பே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை விலைக்கு வாங்கியுள்ளார்.
பெற்றோரை இழந்து வறுமையில் தவித்துவந்த சிறுமியிடம் பேசிய இடைத்தரகர், திருமணத்துக்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும் என நம்பிக்கை அளித்து பணத்திற்கு விற்றுள்ளார்.
இந்நிலையில் 18 வயது அடையாத சிறுமிக்கு சட்டத்திற்கு புறம்பாக பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு சிறுமியை கிடங்கில் பூட்டி வைத்து கணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பான தகவல் அறிந்து சென்ற பிவாண்டி காவல் துறை அதிகாரி ஜிஜேந்திர தாக்குர், கணவர் உள்பட 3 பேரை போக்சோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் பழங்குடியின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Summary
Tribal girl from Thane sold for marriage: 'Husband', three others arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுமை ஆட்டோ மோதி சிறுமி உயிரிழப்பு: சிறுவன் உள்பட இருவா் கைது
சிறுமி பாலியல் வன்கொடுமை: அக்காள் கணவா் உள்பட 2 போ் கைது
இருவேறு இடங்களில் போக்ஸோ வழக்குகளில் 2 போ் கைது

சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




