12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

செருப்பில் செல்போன்.. எய்ம்ஸ் தேர்வில் சிக்கிய மாணவர்

செருப்பில் செல்போனை மறைத்து வைத்து எய்ம்ஸ் தேர்வெழுதச் சென்ற மாணவர் பற்றி

ENS photo

செல்போன் பயன்பாடு - Center-Center-Delhi

Published On :

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை எழுதச் சென்ற மாணவர், தன்னுடைய செருப்புக்குள் செல்போனை மறைத்து எடுத்து வந்ததை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தேர்வு யாருக்கான தேர்வு, பிடிபட்ட மாணவர் மருத்துவ மாணவரா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சோதனைக் கருவியிலிருந்து சப்தம் வந்ததால், தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது பாதுகாவலர்களுக்கு சந்தேகம் வலுத்த நிலையில், அவர்களை கவனமுடன் சோதனை நடத்தினர்.

அப்போதுதான், ஒரு பாதுகாவலர், மாணவர் ஒருவரின் செருப்பைக் கழற்றுமாறு கூறினார். ஒரு செருப்பை சோதித்தபோது அதில் ஒன்றும் இல்லை, மற்றொன்றைக் கழற்றியபோது, அந்த செருப்பை இரண்டாக வெட்டி அதற்குள் செல்போன் ஒளித்துவைக்கப்பட்டிருந்தது.

அந்த செருப்பை, பாதுகாவலர் கேமரா அருகில் கொண்டு வந்து காண்பிக்கிறார். அதற்குள் செல்போன் இருக்கிறது. அங்கிருந்தவர்கள் அனைவரும் அதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவர், வரிசையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மற்ற மாணவர்கள் அனைவரும் சோதனைக்குப் பின் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான விடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அதற்கு பலரும் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

ஒரு மருத்துவராக வேண்டிய மாணவர், இவ்வாறு மோசடி செய்தால், மோசடி செய்து மருத்துவராகும் நபர்கள் எவ்வாறு நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சையை அளிப்பார்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.