நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகமாகி ஆமிர் கான் உடன் நடித்த முதல் திரைப்படமான ‘லால் சிங் சத்தா’ ட்ரெய்லர் வெளியானது. நாக சைதன்யா டிரைலரில் மிகக் குறைவான காட்சிகளே வருவதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆமிர் கான் படத்தை தயாரித்து நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) என்ற நாவலை தழுவி அதே பெயரில் வெளியான திரைப்படத்தின் ரீமேக் தான் 'லால் சிங் சத்தா'. கடந்த 2019-இல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதுல் குல்கர்னி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். இதில் ஆமிர் கான், நாக சைதன்யா, கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாருக் கான் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘மஜிலி' படப்புகழ் நாக சைதன்யா டிரைலரில் 3,4 காட்சிகளே வருவதால் இன்னும் கூடுதலான நேரம் திரையில் வந்திருக்க வேண்டுமென ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 11இல் வெளியாக இருக்கிறது.
படத்தின் டிரைலரைக் காண:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“இந்திய சினிமாவில் தலைசிறந்த படைப்பு”.. துரந்தர் படத்தைப் பாராட்டிய விராட் கோலி!

வடகடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


