எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

மீண்டும் சரித்திர படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்: எந்த அரசராக தெரியுமா?

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST


பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனை பற்றிய வரலாற்று படத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சரித்திரப் படமொன்றில் நடிக்க உள்ளார். மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன் முறையாக மராத்தி படத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

வசீம் குரேஷி தயாரிப்பில் மகேஷ் மஞ்சுரேகர் இயக்கத்தில்  உருவாகவுள்ள இப்படம் சிவாஜியின் கனவுகளை உணமையாக்க போராடிய 7 வீரர்கள் பற்றியது என படக்குழு தெரிவித்துள்ளது. மாராத்தியில் உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Story image

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே இந்த பட அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த படம் குறித்து நடிகர் அக்ஷய் குமார், “எனது கனவு நனவானது. சத்ரபதி சிவாஜியை திரையில் பிரதிபலிப்பதி மிகப்பெரிய பொறுப்பு. இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். மகேஷ் மஞ்சுரேகர் இயக்கத்தில் முதன்முறையாக இணைவது மகிழ்ச்சி” என தெரிவித்தார். 

இயக்குநர் மகேஷ் மஞ்சுரேகர் இது எனது கனவுப் படம். இதற்காக 7 வருடம் ஆராய்ச்சி செய்து வந்துள்ளேன்”என தெரிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இந்தப் படம் பெரு வெற்றியடைய படக்குழுவிற்கு வாழ்த்துகள். பாலாசாகேப் தாக்கரே மாராத்தி சினிமாவுக்காக நின்றவர். ராஜ் தாக்கரேவும் மாராத்தி சினிமாவுக்கு துணையாக இருப்போம்” என கூறினார். 

Related Article

‘ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோ போடுவது எதற்கு?’- அஜித் குறித்து பிரபல விமர்சகர் தாக்கு!

வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் குறித்த அப்டேட்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது!

சமந்தாவின் ‘யசோதா’: ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.