‘டபுள்’ சம்பளம் கேட்கலாம்னு இருக்கேன்: கமல் ஆவேசம்

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வேறு மொழிகளில் பேசிக் கொள்வதை கமல்ஹாசன் எச்சரித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
‘டபுள்’ சம்பளம் கேட்கலாம்னு இருக்கேன்: கமல் ஆவேசம்

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வேறு மொழிகளில் பேசிக் கொள்வதை கமல்ஹாசன் எச்சரித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், செரினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், நடன ஆசிரியரும் நடிகையுமான சாந்தி, அசல் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்ட நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக யூடியூபர் ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார்.

இந்நிலையில், நான்காம் வார இறுதி நிகழ்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

இதில், விதிமுறைகளை மீறி டாஸ்கின் போது வேண்டுமென்று தாமதமாக வருவது, மைக்கை கழற்றிவிட்டு பேசுவது, பிற மொழிகளில் கலந்துரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக போட்டியாளர்களை கமல் கடுமையாக எச்சரித்ததுடன், விதிமுறை மீண்டும் மீறப்பட்டால் ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்றுவோம் என்று கூறினார்.

அப்போது பிற மொழிகளில் பேசிக் கொள்ளும் ஆயிஷா மற்றும் செரினாவின் செயல்பாடுகள் குறித்து கமல் பேசுகையில், எல்லா மொழிகளிலும் பிக் பாஸ் இருக்கு. நான் தமிழ் பிக் பாஸுனு நினைச்சு வந்துருக்கேன். இப்போ விஜய் டிவியிடம் சண்டை போட போகிறேன். இது மலையாள பிக் பாஸா மாறிகிட்டு வருது. நான் டபுள் சம்பளம் கேட்கலாம்னு இருக்கேன். அப்போதான் அவங்களுக்கும் பதட்ட சூழ்நிலை புரியும். நான் மலையாள மொழிகளில் நடித்துள்ளேன். பலர் என்னை மலையாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அந்தந்த வேடத்திற்கும், நிகழ்ச்சிக்கும் ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும், இந்த வாரம் எலிமினேடாகும் போட்டியாளரின் பெயர் அட்டையை காட்டும்போது, செரினா என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, எலிமினேட் செய்யப்பட்ட செரினாவுடன் மேடையில் மலையாளத்தில் உரையாடிய கமல், செரினாவையும் மலையாளத்திலேயே பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு செல்லுமாறு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com