
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக வலம் வருகிறார்.
இதையும் படிக்க | குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரரின் மனைவி
இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியானது. இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கெளரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.