
இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் பல்கலை. வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டேக்வாண்டோ என்பது ஒரு தற்காப்பு கலையாகும்.
தில்லி இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஐசரி கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். ஐசரி கணேஷ்க்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியாவிற்கு 15 மாநிலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.