
பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.500 கோடி அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க | ”யுவன் சங்கர் ராஜா ஒரு ஃப்ராடு” சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரதீப் ரங்கநாதன்
இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம், 3வது இடத்தில் பாகுபலி 2, 4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், 5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது.