”யுவன் சங்கர் ராஜா ஒரு ஃப்ராடு” சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
”யுவன் சங்கர் ராஜா ஒரு ஃப்ராடு” சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தி வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரின் பாடல்களும் பின்னணி இசையும் லவ் டுடே வெற்றிக்கு பலமாக அமைந்தன.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தை ஆராய்ந்த ரசிகர் ஒருவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரதீப் இசையமைப்பாளர் யுவனைக் குறிப்பிட்டு ‘யுவன் ஒரு தண்டம், ஃப்ராடு’ என திட்டி பதிவிட்டதை பகிர்ந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், யுவனின் மங்காத்தா பின்னணி இசை காப்பியடிக்கப்பட்டது என்கிற யூடியூப் விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

லவ் டுடே படத்தில் நாயகனின் வீட்டில் யுவன் புகைப்படம் மாட்டப்பட்டிருப்பதும் படத்தின் வெற்றிக்குப் பின் ‘யுவன் என் படத்திற்கு இசையமைப்பார் என நான் கனவில் கூட நினைத்ததில்லை’ என பிரதீப் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதைவிட, பிரதீப் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை  தகாத வார்த்தையில் திட்டியும் பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com