பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

”இதையும் கொஞ்சம் பாருங்க..” வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பதிவுகள்

முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் டிவிட்டர் பதிவுகளும் வைரலாகி வருகின்றன. 

News image
Updated On :17 நவம்பர் 2022, 11:51 am IST

முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் டிவிட்டர் பதிவுகளும் வைரலாகி வருகின்றன. 

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தி வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரின் பாடல்களும் பின்னணி இசையும் லவ் டுடே வெற்றிக்கு பலமாக அமைந்தன.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தை ஆராய்ந்த ரசிகர் ஒருவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரதீப் இசையமைப்பாளர் யுவனைக் குறிப்பிட்டு ‘யுவன் ஒரு தண்டம், ஃப்ராடு’ என திட்டி பதிவிட்டதை பகிர்ந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், யுவனின் மங்காத்தா பின்னணி இசை காப்பியடிக்கப்பட்டது என்கிற யூடியூப் விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Story image

லவ் டுடே படத்தில் நாயகனின் வீட்டில் யுவன் புகைப்படம் மாட்டப்பட்டிருப்பதும் படத்தின் வெற்றிக்குப் பின் ‘யுவன் என் படத்திற்கு இசையமைப்பார் என நான் கனவில் கூட நினைத்ததில்லை’ என பிரதீப் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் பழைய டிவிட்டர் பதிவுகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. அதில்,  தான் இயக்கிய குறும்படத்தை நடிகர்கள் சாந்தனு, ஜீவா, விவேக் இயக்குநர்கள் ராம், வெங்கட் பிரபு, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரிடம் பகிர்ந்து ‘உங்களுக்கு பிடித்திருந்தால் இதைப் பகிர முடியுமா’ என தனக்கான வாய்ப்பை தேடிச் செல்லும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Story image

இதைப் பகிர்ந்த சில ரசிகர்கள் ‘எல்லாரிடமும் நல்ல விசயங்களும் கெட்டதும் உண்டு. எப்போதோ செய்த தவறுக்காக வளர்ந்த பின் ஒருவரை தாக்குவது சரியல்ல’ என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இணையவாசிகள் இந்த டிவிட்களையும் கவனிக்கலாமே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.