
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் இதுவரை இப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் கோமாளி அல்லது லவ் டுடே எது பிரதீப் ரங்கநாதனின் சிறந்த படம் என்ற கேள்விக்கு நடிகை இவானா, “கோமாளியை விட லவ் டுடே தான் அவரது சிறந்த படம். ஏனெனில் இந்த படத்தில் இயக்குநராகவும் பாடல் எழுதியும் நடித்தும் உள்ளார். அதனால் அவருக்கு இந்தப் படம்தான் சவாலானதாகவும் சிறந்த படமாகவும் இருக்கும்” என கூறினார்.
தெலுங்கில் வெளியான டிரெயிலரும் நல்ல வரவேற்பினைப் பெற்ற நிலையில் இம்மாதத்திலே படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.