உடல்நலக் குறைவு காரணமாக பிரபல நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) சமந்தா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரசிகர்களின் அன்பினால் அந்த கடினமான காலத்தை கடந்து வந்ததாகவும் கூறியிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது யசோதா திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | ’நான் செத்துருவேன்னு..’ உடல்நிலை குறித்து உடைந்து அழுத சமந்தா!
மேலும், இந்த மாதம் தொடக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயோடிசிஸ் நோயால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், சமந்தா மருத்துவமனையில் இல்லை, வீட்டில்தான் உள்ளார் எனவும் சமந்தா தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, சமந்தா நடிப்பில் 5 மொழிகளில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், முதல் 10 நாள்களில் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


