வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

'இது முடிவல்ல'.. 'ரோஜா' சீரியல் குறித்து பிரியங்கா நல்கார் உருக்கம்!

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்கத் தவறியதில்லை ரோஜா தொடர். 

News image

பிரியங்கா நல்கார்

Updated On :28 நவம்பர் 2022, 11:46 am


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் முடிவுக்கு வருவதையொட்டி, அந்தத் தொடரின் நாயகி பிரியங்கா நல்கார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பலரால் ரசிக்கப்பட்ட தொடர் ரோஜா. இளைஞர்களைக் கவரும் வகையில் ரோஜா - அர்ஜுன் காட்சிகள் இருப்பதால், பல இளம் தலைமுறையினரும் ரோஜா தொடருக்கு அடிமையாகியுள்ளனர். 

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தை பிடிக்கத் தவறியதில்லை ரோஜா தொடர். 

பல இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக இருந்ததால், மாலையிலிருந்து இரவு நேரத்திற்கு ரோஜா தொடர் மாற்றப்பட்டது. ஒளிபரப்பு செய்யும் நேரம் மாற்றப்பட்டாலும், அதற்கான ரசிகர் பட்டாளம் மட்டுமே மாறவேயில்லை. மாறாக கூடிக்கொண்டே சென்றது. 

இதனால், ரோஜா தொடரில் ரோஜா - அர்ஜுன் என்ற முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் பிரியங்கா நல்கார், சிபு சூர்யன் ஆகியோருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. 

அப்படிப்பட்டத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அந்தத் தொடரின் நாயகி பிரியங்கா நல்கார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கன்னட நடிகையான பிரியங்கா நல்கார், ரோஜா தொடரின் பயணத்தில் தமிழ் கற்றுக்கொண்டார். இதனால், ரோஜா தொடரின் கடைசிநாள் படப்பிடிப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்து தமிழிலேயே பதிவிட்டுள்ளார். 

அதில், என் வாழ்க்கையில் நான் இந்த நான்கு ஆண்டுகள் மறக்க முடியாத பயணம். ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் இங்க வந்த என்னை நீங்கள் எல்லோரும் உங்கள் வீட்டுப் பெண்ணாக ஏத்துக்கிட்டீங்க!.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்காக நீங்க எல்லோரும் கொடுத்து இருக்கீங்க. உங்களோட அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல. ஆனா இந்த அளவுக்கு எல்லாம் நான் பாக்கியசாலினு தோணுது! 

தொடரில் மட்டும் இல்லாமல் உங்கள் அனைவரின் இதயத்திலும் ரோஜாவாக இருக்க எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சரிகம மற்றும் சன் தொலைக்காட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நிறைய நினைவுகளோடு, நல்ல உள்ளங்களோடு அன்பு ஆசிர்வாதத்துடன் நான் ரோஜா விடைபெறுகிறேன். இது முடிவில்லாத இன்னொரு புதிய ஆரம்பம். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.