தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஜீ தமிழ் 'செம்பருத்தி'க்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் கார்த்திக் ராஜ்!

வங்க மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி தமிழில் 'கார்த்திகை தீபம்' என்ற பெயரில் புதிய தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. 

News image

கார்த்திக் ராஜ்

Updated On :30 நவம்பர் 2022, 5:51 pm IST

''செம்பருத்தி'' தொடர் மூலம் பிரமபலமான நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சின்னத் திரை தொடரில் நடிக்கவுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி கதாபாத்திரம் மூலம் நடித்தவர் கார்த்திக் ராஜ். 'செம்பருத்தி' என்ற கிராமத்தும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களை வென்றவர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரின்போது பல பெண் ரசிகர்களைக் கொண்ட நடிகர் கார்த்திக் ராஜ், 'செம்பருத்தி' தொடரில் பல குடும்பத் தலைவிகளின் ஆதரவையும் பெற்றவரானார். 

Story image

எனினும், 'செம்பருத்தி' தொடரில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அவருக்கு பதில் நடிகர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். 

கார்த்திக் ராஜ் நடித்த 'பிளாக் அண்ட் வொயிட்' திரைப்படம் நேரடியாக ஜீ தமிழில் பிரீமியர் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஜீ தமிழில் நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார். 

Story image

பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி தமிழில் 'கார்த்திகை தீபம்' என்ற பெயரில் புதிய தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தொடரின் நாயகனாக கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா நடிக்கவுள்ளார். இவர் 'பிளாக் அண்ட் வொயிட்' படத்தில் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், கார்த்திக் ராஜின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.