
அக்டோபர் 7 அன்று வெளிவருவதாக இருந்த சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, டிடி, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைஸா வில்சன், ஐஸ்வர்யா தத்தா போன்றோர் நடித்த படம் காஃபி வித் காதல். இசை - யுவன் சங்கர் ராஜா.
இந்தப் படம் அக்டோபர் 7 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் காஃபி வித் காதல் படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காஃபி வித் காதல் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
It’s official #CoffeeWithKadhal scheduled for a Oct 7 release has been postponed! pic.twitter.com/Pysbh6oy3K
— Sreedhar Pillai (@sri50) October 3, 2022