
இயக்குநர் செல்வராகவன்
எழுத்தாளர்களிடம் அகங்காரத்தைக் குறைக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இதையும் படிக்க: ஆதிபுருஷ் பட கிராபிக்ஸை நாங்கள் செய்யவில்லை: பிரபல நிறுவனம் விளக்கம்
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்த நேர்காணல் ஒன்றில், எழுத்தாளர்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘நிறைய எழுத்தாளர்களிடம் பணியாற்ற வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது. எழுத்தாளர்களிடம் அகங்காரத்தைக் குறைக்க வேண்டும். அவர் எதைச் சொல்லப் போகிறார் என்கிற ஈகோ மனநிலையிலிருந்து வெளியே வந்தால்தான் சில நியாயங்கள் புரிய வரும்.’ என பதிலளித்துள்ளார்.