ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஆதிபுருஷ் சர்ச்சை.. பிரபாஸூக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆதிபுருஷ் திரைப்படத்தில் இந்து கடவுள்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் நடிகர் பிரபாஸூக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:03 pm IST

ஆதிபுருஷ் திரைப்படத்தில் இந்து கடவுள்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் நடிகர்

ஸூக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆதிபுருஷ். ஹிந்தி இயக்குநர் ஓம் ரௌத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிகம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. 

குறிப்பாக இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் மோசமாக இருப்பதாகவும், கார்டூன் தொலைக்காட்சி பார்ப்பது போல இருப்பதாகவும் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை பதிவுசெய்தனர். 

இந்த நிலையில் ஹிந்து கடவுள்களான ராமர், ஹனுமன் உள்ளிட்டோரின் பண்புகள், நடத்தை, தோற்றம் ஆகியவற்றுக்கு மாறாக அவர்களை தவறாக சித்திரித்துள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பிரபாஸ் மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பிரபாஸ்

பிரபாஸ்

மேலும் மஹாராஷ்டிரத்தில் ஆதிபுருஷ் படத்தை வெளியிட விடமாட்டோம் என அம்மாநில பாஜக தலைவர் ராம் கதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத், டீசரில் ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அனுமான் மீசையில்லாமல் வெறும் தாடியுடன் இருப்பது முஸ்லீம்களைப் போல் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.