
கார்த்தியின் சர்தார் படத்துக்கு கிடைத்த சென்சார் விவரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் கார்த்தி பாடிய ஏறு மயிலேறி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தின் டிரெய்லர் நாளை (அக்டோபர் 14) வெளியாகிறது.
இதையும் படிக்க | சீனு ராமசாமியுடன் இணையும் மெஹந்தி சர்க்கஸ் ரங்கராஜ்
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்துக்கு கார்த்தி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் சர்தார் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.