தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சீனு ராமசாமியுடன் இணையும் மெஹந்தி சர்க்கஸ் ரங்கராஜ்

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சீனு ராமசாமியுடன் இணையும் மெஹந்தி சர்க்கஸ் ரங்கராஜ்

Published On :

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை சரவணா ராஜேந்திரன் இயக்கினார். இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தில் நடித்த ரங்கராஜ் அதற்கு பிறகு எந்தத் திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். 

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காதல் கதையை அடிப்படையாக வைத்து தயாராகும் இந்தத் திரைப்படத்தை மாதம்பட்டி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பவர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.