தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

படம் | AP

Published On :

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால், இந்த விவகாரத்தில் எந்தவொரு அடுத்தக் கட்ட விசாரணையும் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The ICC has imposed a fine on the Pakistan team for taking too long to bowl their overs during the final Test match against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.