புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழப்பு; பாகிஸ்தான் தடுமாற்றம்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

England team players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணி வீரர்கள் - படம் | AP

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:14 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.

ஜோர்டான் காக்ஸ், ஜேமி ஸ்மித் அரைசதம்!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோர்டான் காக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கஸ் அட்கின்சன் 45 ரன்கள், ஜோஷ் டங் 30* ரன்கள், பென் டக்கெட் மற்றும் டான் லாரன்ஸ் தலா 17 ரன்கள், ஹாரி ப்ரூக் 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும், முகமது அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குர்ரம் ஷாஷத் மற்றும் அலி உஸ்மான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் தடுமாற்றம்!

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் ஒரு ரன் மற்றும் அப்துல்லா ஷஃபீக் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸன் அவைஸ் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 274 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the second Test match against Pakistan, England batted first and were bowled out for 290 runs in their first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.