இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஆலி ராபின்சன், ஜோஷ் டங் வேகத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்; 171 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்களில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

England players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் - படம் | AP

Published On :

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்களில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின், மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஸன் அவைஸ் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன் பின் ஷான் மசூத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷஃபீக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தது. இமாம் உல் ஹக் 42 ரன்கள் எடுத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா ஷஃபீக் 104 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின், சௌத் ஷகீல் 5 ரன்கள், கேப்டன் சல்மான் அலி அகா 21 ரன்கள், அலி உஸ்மான் 0 ரன், முகமது ரிஸ்வான் 12 ரன்கள், குர்ரம் ஷாஷத் 14 ரன்கள் மற்றும் முகமது அப்பாஸ் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

Summary

In the first Test match against England, the Pakistan team was bowled out for 171 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.