நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

மூன்றாவது டெஸ்ட்: 5 பேர் அரைசதம்; இங்கிலாந்து வலுவான முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

படம் | AP

Published On :

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டனில் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக சௌத் ஷகீல் 47 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். முகமது அப்பாஸ் 21 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை!

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 453 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 75 ரன்கள், ஜேமி ஸ்மித் 69 ரன்கள், டேன் லாரன்ஸ் 65 ரன்கள், எமிலியோ கே 60 ரன்கள் மற்றும் ஆலி ராபின்சன் 50 ரன்கள் எடுத்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் 32* ரன்கள், ஜோஷ் டங் 15 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ராஸல்லா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது அலி மற்றும் முகமது இம்ரான் இரண்டு விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 320 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Summary

In the third Test match against Pakistan, the England team was bowled out for 453 runs in its first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.