
2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; வெற்றியை நோக்கி நகர்கிறதா?
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

படம் | AP
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டேன் லாரன்ஸ் அரைசதம்; இங்கிலாந்து 357 ரன்கள் முன்னிலை!
180 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக டேன் லாரன்ஸ் அரைசதம் எடுத்தார். அவர் 66 பந்துகளில் 50* ரன்களுடன் களத்தில் உள்ளார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹாரி ப்ரூக் 34 ரன்கள், எமிலியோ கே 31 ரன்கள், கேப்டன் ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும், குர்ரம் ஷாஷத் மற்றும் முகமது அலி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தானைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 357 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாள்கள் மீதமிருக்க இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Summary
England has secured a strong lead in the second Test against Pakistan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






