ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

டிராவில் முடிந்த இரண்டாவது டெஸ்ட்; தொடரை வென்ற இந்திய அணி!

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Indian team players posing with the trophy.

கோப்பையுடன் போஸ் கொடுக்கும் இந்திய அணி வீரர்கள் - படம் | AP

Published On :

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைக் காட்டிலும் இலங்கை அணி 213 ரன்கள் பின் தங்கியிருந்தது.

இதனையடுத்து, ஃபாலோ ஆன் பெற்று இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 27) இலங்கை அணி டிக்ளேர் செய்யாமல் விளையாடியது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 429 ரன்கள் எடுத்தது. இதனால், ஆட்டம் டிராவில் முடிந்தது.

இலங்கை அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக சோனல் தினுஷா 133* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, பசிந்து சூர்யபந்தரா 92 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 55 ரன்கள், கேஷரா நுவந்தா 46 ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் மானவ் சுதர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் சரண்ஷ் ஜெயின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய சோனல் தினுஷா ஆட்ட நாயகனாகவும், தேவ்தத் படிக்கல் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Summary

The second Test match between India and Sri Lanka ended in a draw.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.