முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

காலே டெஸ்ட்: 193 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்... இலங்கைக்கு 372 ரன்கள் இலக்கு!

காலேயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளதைப் பற்றி...

News image

ரிஷப் பந்த் - ரவீந்திர ஜடேஜா. - படம்: எக்ஸ்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:55 pm IST

காலேயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் 372 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆக. 15 ஆம் தேதி காலேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 462-10 ரன்களும், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 284-10 ரன்களும் எடுத்தனர்.

178 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து ஆடிய கேஎல் ராகுல் 2 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களும், முதல் இன்னிங்ஸில் சதமடித்த தேவ்தத் படிக்கல் 6 பௌண்டரிகளுடன் 44 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களும் எடுக்க, பொறுப்புடன் விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 8 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

துருவ் ஜுரேல் 7 ரன்கள், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதர் தலா 9 ரன்களும், குல்தீப் யாதவ் 5 ரன்களும் எடுத்தனர். 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணித் தரப்பில் அஷிதா ஃபெர்னான்டோ 4 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளும், லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளும், நுவாந்தா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம், இலங்கை அணிக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று (ஆக. 18) மழைபெய்து வருவதால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

Summary

India strengthened their grip on the opening Test after being bowled out for 193 in their second innings, setting hosts Sri Lanka a daunting 372-run target for victory here on Tuesday. India, who had posted 462 in their first innings, had dismissed Sri Lanka for 284 on Monday to secure a crucial 174-run lead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.