தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சோனல் தினுஷா சதம்... 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து ‘ஃபாலோ-ஆன்’ ஆனது இலங்கை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதைப் பற்றி...

சோனல் தினுஷா.

Published On :26 ஆகஸ்ட் 2026, 11:24 am IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. பசிந்து சூர்யபந்தாரா 133 பந்துகளில் 80 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும், கமில் மிஷாரா 19 ரன்களும் எடுத்தனர்.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் சோனல் தினுஷா.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் சோனல் தினுஷா.

நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், சோனல் தினுஷா 85 ரன்களுடளுடனும் லகிரு குமாரா 8 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய தினுஷா, சதம் அடித்து அசத்தினார். அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது சதமாகப் பதிவானது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்ததால், ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இலங்கை அணி குறைந்தபட்சம் 304 ரன்களாவது எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 89.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சோனல் தினுஷா 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்தார். இதனால், இலங்கை அணி 213 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணித் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளையும், புதுமுக வீரர் சரண்ஷ் 2 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் ஃபாலோ-ஆன் ஆன இலங்கை அணி 213 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. போட்டி முடியவடைய ஒன்றரை நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாயிருக்கிறது.

Summary

Debutant all-rounder Saransh Jain overcame DRS agony in Colombo before striking twice on Day 4 of the second Test against Sri Lanka, helping India enforce the follow-on on the hosts on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.