FOLLOW US

ON GOOGLE DISCOVER

வலுவான நிலையில் இங்கிலாந்து; மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது.

படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :29 ஆகஸ்ட் 2026, 4:21 pm IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, 180 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஜோர்டான் காக்ஸ் 11 ரன்களிலும், கேப்டன் ஜோ ரூட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஷத் இரண்டு விக்கெட்டுகளையும், முகமது அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

எமிலியோ கே 30 ரன்களுடனும் மற்றும் ஹாரி ப்ரூக் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 261 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Summary

The start of play on the third day of the second Test between England and Pakistan has been delayed due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.