அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஆகிப் நபிபை கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவைக்க திட்டமிடும் பிசிசிஐ!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவைக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Auqib Nabi

ஆகிப் நபி - படம் | பிசிசிஐ

Published On :

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவைக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடவைக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: துலீப் டிராபியில் குர்னூர் பிரார் விளையாடும் முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்தது. அதேபோல, வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபிக்கும் இரண்டு அல்லது மூன்று சிவப்புப் பந்துப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை உருவாக்க பிசிசிஐ திட்டமிடுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆகிப் நபியை விளையாடவைக்க பிசிசிஐ முயற்சித்து வருகிறது. நியூசிலாந்து ஆடுகளங்கள் இங்கிலாந்து ஆடுகளங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தாலும், இங்கிலாந்தில் விளையாடுவது ஆகிப் நபிக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that the BCCI is planning to have Indian fast bowler Aaqib Nabi play county cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.