ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரின் ஒப்பந்தம் நிறைவு; விரைவில் புதிய பயிற்சியாளர்!

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரின் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரின் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக ரியான் டென் டொஸ்சாட்டும், ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப்பும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரின் பிசிசிஐ ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாகவும், அவர்களது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்படவில்லை எனவும் பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா பேசியதாவது: இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட்டின் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் ஜூன் 10 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்பின் பதவிக்காலம் முடிந்தபின், ஓராண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தமும் ஜூன் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளரை நியமிக்க ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

Ten Doeschate and T Dilip's contracts have ended, new fielding coach to be named soon: Saikia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.