ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

மழையால் தாமதமாகும் இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டி!

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:11 pm IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ம்தல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் 15 ரன்களும், எமிலியோ கே 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் 37 ரன்களுடனும், ஜோர்டான் காக்ஸ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து வலுவாக உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழை காரணமாக தாமதமாகியுள்ளது. நீண்ட நேரமாக மழை நிற்காததால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. மழை நின்றவுடன் போட்டி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 59 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The start of the second day's play between England and Pakistan has been delayed due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.