ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

ஐபிஎல் தலைமுறை வீரர்கள் டெஸ்ட்டில் நன்றாக விளையாடுவது எப்படி? மஞ்ச்ரேக்கர் கூறுவதென்ன?

ஐபிஎல் தலைமுறை வீரர்கள் டெஸ்ட்டில் நன்றாக விளையாடுவது புரியாத புதிராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:41 pm IST

ஐபிஎல் தலைமுறை வீரர்கள் டெஸ்ட்டில் நன்றாக விளையாடுவது புரியாத புதிராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதிரடியாக விளையாடக் கூடிய டி20 வடிவிலான போட்டிகளிலிருந்து அவர்களால் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறும் விளையாட முடிவதை இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு எப்படி இளம் வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மாடர்ன் பாப் பாடகர்களை கிளாசிக்கல் பாடல் பாடக் கூறினால், அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிப் பழகிய இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்கேற்றவாறு சிறப்பாக விளையாடுகிறார்கள். டி20 வடிவிலான போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடிய தலைமுறை எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் அவர்களால் எப்படி சிறப்பாக செயல்பட முடிகிறது என்பது புரியவில்லை. ஏனெனில், டி20 வடிவிலான போட்டியில் பேட்டிங் செய்வதற்கும், டெஸ்ட் வடிவிலான போட்டியில் பேட்டிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்களும் எடுத்து அசத்தினார். அதேபோல, அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மற்றொரு இளம் வீரர் மானவ் சுதர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian player Sanjay Manjrekar has stated that it is a baffling puzzle how players from the IPL generation perform well in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.