இந்திய அணிக்கு அதன் 600-வது டெஸ்ட்டில் கேப்டன் ஷுப்மன் கில் வெற்றி பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். மேலும், இலங்கைக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி விளையாடும் 600-வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் நன்றாக உணர்வதாகவும், 600-வது டெஸ்ட்டில் அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுவதாகவும் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மிகவும் நன்றாக உணர்கிறேன். கடந்த ஓராண்டாக நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். நாங்கள் சரியான திசையில் பயணித்து வருவதாக நினைக்கிறேன். தற்போது எங்களுக்கு இருக்கும் முதன்மையான இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது. அடுத்து விளையாடவுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் 6 அல்லது 7 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் அடிப்படையில் பார்க்கையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
A landmark Test match awaits in Galle ð#TeamIndia is all set to play their 6â£0â£0â£th Test in Men's Cricket ðð
— BCCI (@BCCI) August 14, 2026
Hear what this special occasion means for them ðð
WATCH ð¥ð½ #SLvINDhttps://t.co/icGc1Zv8q6 pic.twitter.com/WeEdogyOzG
இந்திய அணியை அதன் 600-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வழிநடத்தவுள்ளதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இந்திய அணியை எந்த ஒரு போட்டியில் கேப்டனாக வழிநடத்தினாலும், அது மிகவும் சிறப்பான உணர்வைத் தரும். இந்திய அணியை சுதந்திர தினத்தில் அதன் 600-வது டெஸ்ட்டில் வழிநடத்தவுள்ளது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.
Summary
Shubman Gill has stated that he feels good about the responsibility of captaining the Indian team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் உடல் தகுதியுடன் ரிஸ்க் எடுக்க முடியாது: ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்லுக்கு காயம்... இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா?

இந்தியாவின் வருங்காலத்திற்காக... ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு!

ஆட்டத்தின் பாதியில் பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்; காரணம் என்ன?
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



