75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் வேண்டும்: ராகுல் டிராவிட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Vaibhav Suryavanshi

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Published On :2 வினாடிகள் முன்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான வைபவ் சூர்யவன்ஷி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (776 ரன்கள்) குவித்த வீரர்கள் வரிசையிலும் முதலிடம் பிடித்தார்.

ஐபிஎல் தொடர் வைபவ் சூர்யவன்ஷிக்கு சிறப்பாக அமைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமானார். அவர் அறிமுகமான இரண்டாவது தொடரிலேயே தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தினார். டி20 வடிவிலான கிரிக்கெட்டில் அசத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியிலும் இடம்பெற வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடி வைபவ் சூர்யவன்ஷிக்கு வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடுவதற்கான அனுபவம் நிறைய கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் வளர்வதையும் நாம் விரும்புகிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் வேண்டும். அவரால் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட முடியும் என நம்புகிறேன்.

வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடிய அளவுக்கு அவர் அதிகமாக சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடியதில்லை. அவருக்கு 15 வயதுதான் ஆகிறது. அதனால், அவருக்கான நேரத்தைக் கொடுத்து நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். அவர் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும்போதும் நாம் அவரிடம் பொறுமை காக்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வெற்றிகரமான வீரராக உருவானால், டெஸ்ட் வடிவிலான போட்டியின் எதிர்காலமும் நன்றாக இருக்கும். வெள்ளைப் பந்து போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவது போல, சிவப்புப் பந்து போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் நன்றாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார்.

Summary

Former Indian head coach Rahul Dravid has stated that the Indian team needs players like Vaibhav Suryavanshi in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.