புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இங்கிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படம் | AP

Published On :

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 449 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது.

ஆட்டத்தின் முதல் பந்தில் பென் டக்கெட் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் எமிலியோ கே ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பென் டக்கெட் மற்றும் எமிலியோ கே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜோர்டான் காக்ஸ் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தனர். ஜோர்டான் காக்ஸ் 76 பந்துகளில் 59 ரன்களும் (8 பவுண்டரிகள்), கேப்டன் ஜோ ரூட் 69 பந்துகளில் 62 ரன்களும் (9 பவுண்டரிகள்) எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

Summary

England achieved a magnificent victory by eight wickets in the third Test match against Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.