
பாகிஸ்தான் ஃபாலோ ஆன்..! இங்கிலாந்தின் வெற்றியைத் தாமதப்படுத்திய மழை!
இங்கிலாந்து - பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...

பாகிஸ்தான் வீரர்கள். - படம்: ஏபி
இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 453 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஃபாலோ ஆன் ஆனதால், பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் விளையாட இங்கிலாந்து கேப்டன் பணித்தார்.
இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடிவரும் பாகிஸ்தான் அணி 52 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தார். பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் அணி 268 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டுமெனில் பாபர் அசாம் இரட்டைச் சதம் அடித்து காப்பாற்றினால்தான் உண்டு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் முடிவில் களத்தில் அசான் அவைஸ் 29, ஷான் மசூத் 21 ரன்களுடன் விளையாடி வந்தார்கள். மூன்றாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் தொடங்கவிருக்கிறது.
ஏற்கெனவே, இந்தத் தொடரினை 2-0 என இங்கிலாந்து வென்றுள்ள நிலையில், தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் பந்துவீசி வருகிறார்கள்.
Summary
Rain halts England charge with Pakistan 52-2 and 268 behind in Edgbaston cricket test
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





