இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேசியுள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆட்டத்தின் இரண்டாவது நாளிலிருந்து நாங்கள் போட்டியில் இருப்பதாகவே உணர்ந்தேன். நான்காவது இன்னிங்ஸில்கூட இலங்கை வீரர்கள் கடின உழைப்பை வழங்கியதாக நினைக்கிறேன். இந்தத் தோல்வியை எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆனால், இது ஒரு நல்ல ஆட்டமாக அமைந்தது.
ஆட்டத்தின் முதல் மூன்று நாள்கள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் காலே ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் எங்களுக்கு அழுத்தம் அளிக்கும் விதமாக விளையாடினார்கள். இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்ததுடன், அதிக ரன்கள் குவித்தனர். நாங்கள் பேட்டிங் செய்தபோது, சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்தோம். அங்கிருந்து போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியது என்றார்.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது.
Summary
Sri Lankan captain Dhananjaya de Silva has spoken about the defeat in the first Test match against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை; வெற்றி யாருக்கு?

இந்தியா - இலங்கை டெஸ்ட்: மழையினால் பாதிப்பு!

600ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! இலங்கை அணி அறிவிப்பு!
விடியோக்கள்

பைத்தியம் என்கிறார்! அடிக்க வருகிறார்! பேரவையில் காரசார விவாதம்! | TN Assembly | TVK




