
டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை முதலிடத்துக்கு கொண்டு வருவதே என்னுடைய இலக்கு: பிளெமிங்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றுவதே தன்னுடைய இலக்கு என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ஜோ ரூட் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றுவதே தன்னுடைய இலக்கு என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரண்டன் மெக்கல்லம் அண்மையில் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றுவதே தன்னுடைய இலக்கு என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை உலகின் சிறந்த அணியாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். டெஸ்ட் போட்டிகளில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாக உள்ளது. அதனால், இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும். ஆனால், இதனை எளிதான விஷயம் எனக் கூற மாட்டேன். வாய்ப்பிருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உலகின் சிறந்த டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதை விரும்புகிறேன் என்றார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் வருகிற 2030 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
England head coach Stephen Fleming has stated that his goal is to make the England team the world's number one side in Test cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







