இந்திய அணிக்காக மானவ் சுதர் நீண்ட காலம் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்திய அணிக்காக மானவ் சுதர் நீண்ட காலம் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
An absolute display of skill and precision as Manav Suthar picks up 10 wickets in the 1st Test.
— BCCI (@BCCI) August 19, 2026
A glimpse of how he fared in his last ten deliveries in the second innings ðð#SLvIND #TeamIndia pic.twitter.com/B3QVZdhPuG
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மான சுதர் மிகவும் அற்புதமாக பந்துவீசினார். அவர் தொடர்ச்சியாக மிகவும் நன்றாக பந்துவீசுகிறார். அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார் எனத் தோன்றுகிறது. பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் சதங்கள் விளாசுவது மிகவும் முக்கியம். ஆனால், சதம் விளாசிய பிறகும் அவர் இரண்டாவது இன்னிங்ஸிலும் நன்றாக விளையாடி ரன்கள் குவித்தார் என்றார்.
இலங்கைக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மானவ் சுதர், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team captain Shubman Gill has stated that Manav Suthar will play for the Indian team for a long time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

600-வது டெஸ்ட்டில் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தருவாரா ஷுப்மன் கில்?

இந்தியாவின் வருங்காலத்திற்காக... ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு!

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK




