திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

400 ரன்களை சேஸ் செய்வது ஒருபோதும் எளிது கிடையாது: ஷுப்மன் கில்

ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை சேஸ் செய்வது ஒருபோதும் எளிது கிடையாதென இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Rohit Sharma - Captain Shubman Gill

ரோஹித் சர்மா - கேப்டன் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Published On :

ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை சேஸ் செய்வது ஒருபோதும் எளிது கிடையாதென இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குவாஹாட்டியில் நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 406 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசியும், ரோஹித் சர்மா சதம் விளாசியும் அசத்தினர். இவர்களது அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை சேஸ் செய்வது ஒருபோதும் எளிது கிடையாதென கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: என்னுடைய உடலில் பல இடங்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதென நினைக்கிறேன். மதியம் மிகவும் வெயில் அதிகமாக இருந்தது. 400 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்வதால் இந்திய அணியின் மீது அழுத்தம் இருந்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும், திடல் சிறியதாக இருந்தாலும் 400 ரன்களை சேஸ் செய்வது என்பது ஒருபோதும் எளிது கிடையாது. அதனால், இந்திய அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்காக கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை வென்று கொடுக்க முடிந்ததும் மகிழ்ச்சியளித்தது.

போட்டியை நான் சிறிய பாகங்களாக பிரித்துக் கொண்டேன். பவர்பிளேவில் விக்கெட் இழக்காமல் 80 ரன்கள் எடுப்பது எங்களது இலக்காக இருந்தது. புதிய பந்தில் ரன்கள் குவிப்பது கடினமாக இருக்கும் என்பதால், பந்து சற்று பழையதான பிறகு வேகப் பந்துவீச்சாளர்களை குறிவைத்தோம். வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திடலின் குறைந்த தூரம் கொண்ட பகுதியில் பவுண்டரிகளை விளாசினோம். 25 ஓவர்களில் 200 அல்லது 210 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என நினைத்தேன். ஆனால், நாங்கள் 230 - 240 ரன்கள் எடுத்திருந்தோம். அதன் பின், அழுத்தம் எங்கள் மீது இல்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியே அதன் பின் அழுத்தத்தில் இருந்தனர் என்றார்.

முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை 255 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team captain Shubman Gill has stated that chasing 400 runs in One Day cricket is never easy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER