தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்: ஷுப்மன் கில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Indian team captain Shubman Gill

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | AP

Published On :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் டிராவில் நிறைவடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் தொடக்கத்தில் மிகவும் நன்றாக பந்துவீசி நெருக்கடியை ஏற்படுத்தினோம். ஆனால், போட்டியின் பிற்பகுதியில் ஆடுகளம் மெதுவாக மாறிவிட்டது.

வீரர்கள் ஷாட்டுகள் விளையாடவில்லை என்றால், விக்கெட்டினை வீழ்த்துவது கடினம். எங்களால் முடிந்தவரை விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்தோம். விக்கெட் வீழ்த்தி போட்டியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் விளையாடியதாக நினைக்கவில்லை. மூன்று நாள்களாக சுழற்பந்துவீச்சாளர்கள் 50-60 ஓவர்கள் வீசியுள்ளனர். இந்த மாதிரியான சூழலில் மூன்று நாட்கள் ஃபீல்டிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. அணியின் முயற்சிக்கு நான் 10/10 மதிப்பெண்கள் கொடுப்பேன். இலங்கை அணியும் நன்றாக விளையாடினார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற எங்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நன்றாக விளையாடி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற நாங்கள் நல்ல நிலையில் இருப்போம் என்றார்.

இந்திய அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team captain Shubman Gill has stated that the Indian team has a good chance of qualifying for the World Test Championship final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.