மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Indian team captain Shubman Gill

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:15 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், தேவ்தத் படிக்கல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் எடுத்தார். அவர் 108 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

முதல் இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 3043 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

Summary

Shubman Gill has set a new record as the captain of the Indian Test cricket team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.