சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடம்: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முன்னேறிய ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

Australian batsman Steve Smith acknowledges the applause after scoring his fifty on the first day of the first cricket Test match between Australia and Bangladesh at Marrara Stadium in Darwin on August 13, 2026. (Photo by William WEST / AFP) / --IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE--

ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப் படம்) - AFP

Published On :3 செப்டம்பர் 2026, 12:24 pm IST

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (37 வயது) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் 2022, 2023ல் ஐசிசி தரவரிசையில் இரண்டாமிடம் பிடித்திருந்தார். பின்னர் 2024-25ல் மூன்று முதல் ஐந்து இடங்களில் மாறிக்கொண்டே இருந்தார்.

தற்போது, சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். தற்போது முதலிடத்தில் ஹாரி புரூக் நீடிக்கிறார்.

ஐசிசி தரவரிசையில் 2015 முதல் 2021 வரை 7 ஆண்டுகள் அதாவது 1,500 நாள்களுக்கும் அதிகமாக முதலிடத்தை தக்கவைத்திருந்தார். பின்னர் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்காமல் இருக்கிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா 1-1 என சமன்செய்தது. இந்தத் தொடரில் ஸ்மித் மூன்று இன்னிங்ஸில் 157 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் முதலிடம் பிடிக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசை

1. ஹாரி புரூக் - 856 புள்ளிகள்

2. ஸ்டீவ் ஸ்மித் - 840 புள்ளிகள்

3. ஜோ ரூட் - 820 புள்ளிகள்

4. டிராவிஸ் ஹெட் - 811 புள்ளிகள்

5. டெம்பா பவுமா - 775 புள்ளிகள்

Summary

Second place in ICC rankings: Steve Smith moves up after 3 years!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.